காமராஜர் கலாம் கல்வி அறக்கட்டளை

எங்கள் பயணம்

  • 2017ஆம் ஆண்டு திரு. ரெ. செல்வராஜ் அவர்களின் கனவிலும் கருதியிலும் பிறந்தது காமராஜர் கலாம் கல்வி அறக்கட்டளை.
  • பெற்றோர் இல்லாத, ஆதரவற்ற, உடல் ஊனமுற்ற மாணவர்களின் கல்விக்கான கனவுகள் நனவாக வேண்டும் என்ற எண்ணத்துடன், அவர்களின் வாழ்வில் ஒளியை ஊற்றும் ஒரு சிறிய ஒளிக்கதிராக எங்கள் பயணம் தொடங்கப்பட்டது.
  • இன்றுவரை தமிழகம் முழுவதும் 40க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கல்வி ஆதரவு வழங்கி, எதிர்காலத்தை பிரகாசமாக்கியுள்ளோம்.

எங்கள் அடித்தளக் கோட்பாடுகள்

🕊 "எதையும் இழந்தாலும் பரவாயில்லை; கல்வியை இழக்கக் கூடாது" — காமராஜர்

🕊 "கனவுகள் எண்ணத்தில் நிற்காமல், செயலில் நிறைவேற வேண்டும்" — அப்துல் கலாம்

இவர்கள் இருவரின் பொன்மொழிகள் எங்கள் வழிகாட்டிகள்.

எங்கள் பணி

  • கல்வி ஊக்குவிப்பு
  • குழந்தைகளின் கனவுகளை வளர்த்தல்
  • தமிழ் மொழி மற்றும் கலாச்சார பண்பாட்டைப் பராமரித்தல்
  • சமுதாய வளர்ச்சிக்காக ஒளி பரப்புதல்

எங்கள் முயற்சிகள் கல்வியின் ஒளியை ஒவ்வொரு குழந்தையின் வாழ்விலும் பரப்புவதற்காகவே!

எங்கள் சபதம்

எல்லா குழந்தைகளும் கனவுகளோடு மலர வேண்டும.

எல்லா கனவுகளும் கல்வியின் சிறகில் பறக்க வேண்டும்.

எல்லா வாழ்வும் ஒளியால் பிரகாசிக்க வேண்டும்.

எங்கள் தொனிப்பெயர்

"கல்வி இன்றி விடியாத காலை இல்லை. கனவு இன்றி மலராத பூவும் இல்லை."

காமராஜரின் கல்விச் சிந்தனையும், கலாமின் கனவுகளும் நாங்கள் உயிராக்குகிறோம்!