காமராஜர் கலாம் கல்வி அறக்கட்டளை, 2017ஆம் ஆண்டு திரு. ரெ.செல்வராஜ் அவர்களால் நிறுவப்பட்டது. பெற்றோர் இல்லாத, ஆதரவற்ற மற்றும் உடல் ஊனமுற்ற மாணவர்களின் கல்வி கனவுகளை நனவாக்கும் பணியில் நாங்கள் முழு ஈடுபாடுடன் செயல்படுகிறோம்.
இதுவரை, தமிழகம் முழுவதும் 40க்கும் அதிகமான மாணவர்களுக்கு கல்வி ஆதரவு வழங்கி, அவர்கள் எதிர்காலத்தை பிரகாசமாக்கியுள்ளோம். தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தின் சிறப்பை மீட்டெடுத்து, அதை புதிய தலைமுறையிடம் கொண்டு சேர்ப்பதும் எங்களின் பெரும் பணி.
எல்லா குழந்தைகளும் கனவுகளோடு வளர, கல்வி ஒளியைப் பரப்புவதே எங்கள் குறிக்கோள்.